இலங்கைத் தமிழர் பிரச்னை.... திமுகவினருக்கு சபாநாயகர் கண்டனம்

இலங்கைத் தமிழர் பிரச்னை, குளச்சல் துறைமுக விவகார‌த்தால் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட திமுகவினருக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தின்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ஓ.கே.சின்ராஜ், இலங்கை இறுதிக்கட்டபோரின்போது அப்போதைய திமுக அரசு எதுவும் செய்யவில்லை என குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் முழக்கமிட்டதால் அமளி நிலவியது. திமுக உறுப்பினர்கள் பேரவை விதிகளை மதிப்பதில்லை என கண்டனம் தெரிவித்த சபாநாயகர் தனபால், விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

முன்னதாக, குளச்சல் துறைமுக விவகாரம் ப‌ற்றி பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சியில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பின்னர் வீணடிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி பேசுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என கூறி திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.