செய்திகள் உண்மை உடனுக்குடன்

சபாநாயகர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக உறுப்பினர்கள் மீது சபாநாயகர் வேண்டுமென்றே அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதி வளர்ச்சிப் பணி தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், பின்னர் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரவையில் திமுகவினர் கொண்டுவரும் தீர்மானங்களை விவாதிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

நேற்று பேரவையில் சபாநாயகர் வழங்கிய தீர்ப்பு, திட்டமிட்டு, முதல்வரின் அறிவுரைப்படி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பேரவையில் திமுக உறுப்பினர்கள் எப்போதும் கண்ணியக் குறைவுடன் நடந்து கொண்டதில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.