2017 பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடைபெறும்: மத்திய அமைச்சர் உறுதி

வருகிற 2017ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில், ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடத்தப்படும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே உறுதியளித்திருப்பதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரனுடன் சென்று, மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவேவை சந்தித்ததாக, பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அப்போது, வருகிற பொங்கல் திருநாளில், ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, ராஜசேகரனும், தாமும் வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, 2017ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில், ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும் என்று தங்களிடம் உறுதியளித்திருப்பதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.