செய்திகள் உண்மை உடனுக்குடன்

’தமிழக மருத்துவ மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை’: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விடுதியில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த சரவணன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகலை முதலாமாண்டு பயின்று வந்தார். இந்தநிலையில், கடந்த ஜூலை 10-ல் அவரது விடுதி அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலினை மறு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரி சரவணனின் தந்தை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து மருத்துவர் சுதிர்.கே.குப்தா தலைமையிலான மருத்துவக் குழுவினர் செய்த பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவருக்கு மருத்துவத் தொழிலில் தேர்ச்சி பெற்ற வேறு யாராவது தான் விஷ ஊசியைச் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.