செய்திகள் உண்மை உடனுக்குடன்

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து

YYYYYYYY-2

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் தனது முகநூலில் கூறியுள்ளதாவது:

உடல் நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் முழுமையாக குணம் அடைந்து, நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் மற்றும் நீர் சத்துக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைந்ததை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.