செய்திகள் உண்மை உடனுக்குடன்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் செய்யாது: தமிழிசை சவுந்தரராஜன்

காவிரி நதி நீர் தொர்பான வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. அதுகுறித்து உத்தரவிட உச்சநீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவை இன்று மாலை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் இல கணேசன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதா கிருஷ்ணன், தேசிய செயலாளர் ராஜா, மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கொண்ட குழு அமித் ஷாவை சந்தித்து காவரி விவகாரம் குறித்து விவாதித்தனர். நீர்ப் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமைகள் குறித்து இந்த குழு அமித்ஷாவிடம் எடுத்துரைத்தனர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பாரதிய ஜனதா தமிழகத்திற்கு நிச்சயமாக துரோகம் செய்யாது எனக் கூறினார்.