3 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

3 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை தொகுதியில் அஞ்சுகம் பூபதி, அரவக்குறிச்சியில் கே.சி.பழனிச்சாமி, திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி போட்டியிடுகிறார். தமிழகத்தில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த 23 பேருக்கு இன்று நேர்காணல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 3 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் தஞ்சையில் போட்டியிடும் அஞ்சுகம் பூபதி மற்றும் அரவக்குறிச்சியில் போட்டியிடும் கே.சி. பழனிச்சாமி ஆகியோர் கடந்த முறை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆவர்.