விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62-ஆவது பிறந்தநாளை, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சென்னை ராயப்பேட்டையில் கொண்டாடினர்.

சென்னை ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய 62-ஆவது பிறந்தநாள் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக நேற்று இரவு கொண்டாடபட்டது. நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் அப்பகுதி மக்கள் கொண்டாடினர். இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த விழா ஒவ்வொரு வருடமும் தவறாமல் கொண்டாடப்படுவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.