மத்திய அரசுக்கு எதிரான வி.சி.க மாநாடு... வைகோ நிலையால் கூட்டணியில் பாதிப்பில்லை திருமாவளவன்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கண்டித்து புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநாட்டில் மதிமுக பங்கேற்காதது மக்கள்நலக் கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தாது என திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை அசோக்நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ‌அவர், உடன்பாடான விவகாரங்களில் கூ‌ட்டணிக் கட்சிகள் ஒன்றுபட்டு‌ செயல்படும் என்று தெரிவித்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 28ம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் இடதுசாரிகள் பங்கேற்கின்றன. ஆனால் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதால் அதில் பங்கேற்கவில்லை என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.