செய்திகள் உண்மை உடனுக்குடன்

சேகர் ரெட்டி கைது: ஜன.3 வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி

சட்டவிரோத பணபரிமாற்ற புகாரில் சேகர் ரெட்டி கைதுசெய்யப்பட்டுள்ளார். சேகர் ரெட்டி மற்றும் அவரது சகாவானா சீனிவாசலு ஆகியோரை ஜனவரி 3 வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.131 கோடி ரொக்கமும், 171 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சேகர் ரெட்டி மற்றும் அவரது சகாவான சீனிவாசலு ஆகியோர் மீது 3 பிரிவிகளின் கீழ் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அவர்களிடம் நேற்று முதல் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சேகர் ரெட்டி மற்றும் சீனிவாசலு ஆகியோரைக் கைது செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை ஜனவரி 3ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் ஜாமீன் கோரி சேகர் ரெட்டி மற்றும் சீனிவாசலு ஆகியோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.