சேகர் ரெட்டியின் நிறுவன முதலீடுகளின் பட்டியல்..

சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் பங்கு வகிக்கும் நிறுவனங்களில் சுமார் 50 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

* 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விஸ்டா ரியாலிட்டி - சேகர் ரெட்டி, அவரது மனைவி ஜெயஸ்ரீ இயக்குநர்கள் -ரூ.1 கோடி முதலீடு

* 2013 ஆம் ஆண்டில் ஜெ.எஸ்.ஆர். இன்ஃப்ரா புராஜெக்ட்- சேகர் ரெட்டி, ஜெயஸ்ரீ இயக்குநர்கள் - ரூ.50 லட்சம் முதலீடு

* ஜெ.எஸ்.ஆர். இன்ஃப்ரா டெவலப்பர்ஸ்- சேகர் ரெட்டி, ஜெயஸ்ரீ, சீனிவாசலு இயக்குநர்கள் - ரூ.45 கோடி முதலீடு

* 2014 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எஸ். மெர்சன்டிஸ் - சேகர் ரெட்டி, சீனிவாசலு இயக்குநர்கள் - ரூ.1 லட்சம் முதலீடு

* 1998 ஆம் ஆண்டில் நுங்கம்பாக்கத்தில் தொடங்கப்பட்ட உமாக் ரிசோர்சஸ் கம்யூனிகேஷன்ஸ் - சேகர் ரெட்டி, சீனிவாசலு இயக்குனர்ககள் - ரூ.5 லட்சம் முதலீடு

* எஸ்.ஆர்.எஸ். இன்னவேஷன்ஸ் - சேகர் ரெட்டி, சீனிவாசலும் இருவரும் ரூ.1 லட்சம் முதலீடு

* 2014 ஆம் ஆண்டு எ‌ஸ்.ஆர்.எஸ். மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர் சேகர் ரெட்டி - ரூ.1 லட்சம் முதலீடு

* சென்னை நுங்கம்பாக்கத்தில் 2010 முதல் செயல்படு செயல்படும் வி-டாப் இன்ஃப்ராடெக் - இயக்குனர்களில் ஒருவரான சேகர் ரெட்டி, ரூ.3 கோடி முதலீடு

* ஸ்ரீபாலாஜி டோல்வேஸ்- இயக்குனர் சேகர் ரெட்டி, இந்த ஆண்டில் ரூ.10 லட்சம் முதலீடு