செய்திகள் உண்மை உடனுக்குடன்

விவசாயிகள் போராட்டம் மாநில அரசுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை: ஸ்டாலின்

Stalin fb

தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் மாநில அரசுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்று எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை போதிய அளவு பெய்யாததாலும், காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகா வழங்காத நிலையிலும், பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரியும், பயிர்களுக்கு இழப்பீடு கேட்டும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். அதிகரிக்கும் இந்தப் போராட்டங்களும், விவசாயிகளின் மரணமும் அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். விவசாயிகளில் போராட்டங்களில் திமுக விவசாய அமைப்பினர் இணைந்து செயல்படவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். திருவாரூரில் நடந்த போராட்டத்தில் மகாலிங்கம் என்ற விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், மத்திய மாநில அரசுகள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.