செய்திகள் உண்மை உடனுக்குடன்

தொடரும் துயரம்...2 மாதங்களில் 59 விவசாயிகள் உயிரிழப்பு

Farmer-2

தமிழகத்தில் கடந்த இரண்டு மாத காலத்தில் 59 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக விவசாய சங்கத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும், காவேரியில் கர்நாடக அரசு சரிவர தண்ணீர் திறந்துவிடாததாலும் பயிர்கள் நீரின்றி கருகிவருகின்றனர். இதனால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட காவிரி பாசன பகுதியில், விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். அதிக அளவாக நாகை மாவட்டத்தில் மட்டும் 34 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் 12 விவசாயிகளும், தஞ்சை மாவட்டத்தில் 4 விவசாயிகளும் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 விவசாயி‌களும், புதுக்கோட்டை, மதுரை, அரியலூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு விவசாயியும் உயிரிழந்துள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.