செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஜெயலலிதா புகழை காக்கும் கடமை உள்ளது: தீபா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக தாம் வர வேண்டும் என்பது பலரது விருப்பம் என்று அவரது அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் இதுவரை பேசவில்லை என்றும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் திட்டம் ஏதும் இப்போதைக்கு இல்லை என்றும் கூறினார்.ஜெயலலிதாவின் புகழைக் காப்பாற்றும் கடமை தமக்கு இருப்பதாகவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தீபா கூறினார். புதிய கட்சி தொடங்குவது குறித்து விரைவில் தீர்க்கமான முடிவை அறிவிப்பதாக அவர் கூறினார்.