தமிழக வறட்சி பாதிப்பு ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

தமிழகத்தில் நடத்தப்பட்ட வறட்சி பாதிப்பு பற்றிய ஆய்வறிக்கைகளை முதலமைச்சரிடம் மாவட்ட ஆட்சியர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

பருவமழை பொய்த்ததாலும், போதிய நீரின்றி பயிர்கள் கருகியதாலும் தமிழகத்தில் விவசாயிகள் மரணம் தொடர் கதையாகி வருகிறது. இதனையடுத்து, கடந்த 5-ஆம் தேதி முதல், காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் வறட்சி பாதித்த பகுதிகளை அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, கருகிய பயிர்களை காண்பித்து விவசாயிகள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். அறிவியல்பூர்வமான முறையில் நடைபெற்ற இந்த ஆய்வு நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் இன்று வறட்சி பாதிப்பு குறித்த ஆய்வறிக்கைகளை ஆட்சியர்கள் முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கை அடிப்படையில், மத்திய அரசிடம் தமிழக அரசு வறட்சி நிவாரண நிதி கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.