செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு வேண்டுகோள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழக மக்கள் அனைவரும், நாளை மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் வந்து நிற்க வேண்டும் என நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மண்ணின் பண்பாட்டைக் காப்பதற்காக தமது கோரிக்கையை ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் உலக மொழிகளில் மிக மூத்த மொழி, தமிழன் என்பதில் பெருமையடைகிறேன். தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு பிரச்னையில் அமைதியாக இருக்க முடியாது. இதற்காக அறவழியிலான போராட்டத்தை சமூக வலைதளம் வாயிலாக மேற்கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு காவிரிநீர் உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகள் உள்ளன.