செய்திகள் உண்மை உடனுக்குடன்

திராவிட இயக்கங்களை யாராலும் தொட கூட முடியாது.. மு.க.ஸ்டாலின்

திராவிட இயக்கங்களை யாராலும் தொட கூட முடியாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வரும் போகியன்று திராவிட இயக்கங்களை அகற்றிவிட்டு தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திராவிட இயக்கங்களை யாராலும் அழிக்க அல்ல.. தொட கூட முடியாது என ஆவேசமாக பதிலளித்துள்ளார்.