தடையை மீறி ஜல்லிக்கட்டு.. 4 பேர் கைது; காளைகள் பறிமுதல்

கடலூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம், திருவந்திபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடத்தப்பட்டது. தரிசு நிலத்தில் வாடிவாசல் அமைத்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. இளைஞர்கள் ஆர்வமுடன் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளை பெற்றனர்.

இதனிடையே, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது குறித்து தகவல் அறிந்ததும், அங்கு விரைந்த வந்த காவல்துறையினர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் 4 பேரை கைது செய்தனர். ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 3 காளைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மா‌‌டுபிடி வீரர்களையும், காளை உரிமையாளர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.