செய்திகள் உண்மை உடனுக்குடன்

சென்னை விமான நிலையத்தில் 75-வது முறையாக கண்ணாடி உடைந்தது

சென்னை விமான நிலையத்தில் 75-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது.

பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் மறு கட்டமைப்பு செய்யப்பட்டது முதலே அவ்வப்போது சென்னை விமான நிலைய கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி வருகின்றன. இந்நிலையில், விமான நிலையத்தின் உள்நாட்டு வருகை பகுதியில் இன்று காலை 75-ஆவது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் இதில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.