செய்திகள் உண்மை உடனுக்குடன்

அமேசானில் பொருட்கள் வாங்காதீர்கள்: விஜயகாந்த்!

Vijayakanth

இந்திய தேசியக் கொடியை அவமதித்த அமேசான் நிறுவனத்தின் செயலுக்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஜயகாந்த் அவரது டுவிட்டர் பதிவில், அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடியை மிதியடிகளில் அச்சிட்டு விற்பனை செய்வதைக் குறிப்பிட்டுள்ளார்.
அமேசான் நிறுவனத்தின் இந்த செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்றும், அமேசானின் நடவடிக்கை இந்தியாவையும், இந்தியர்களையும் அவமதிப்பதாகவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அமேசான் இணையதளத்தில் இருந்து தேசியக் கொடி அச்சிடப்பட்ட மிதியடிகள் விற்பனையை நிறுத்துவதுடன் மன்னிப்பும் கேட்க வேண்டும். இந்திய கொடியை அச்சிட்ட அமேசான் இணையதளத்தில் எந்த பொருட்களும் தமிழர்கள் வாங்க கூடாது எனவும் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே அமேசான் நிறுவனம் தேசியக் கொடி அச்சிட்ட மிதியடிகள் விற்பனையை நிறுத்தியுள்ளது.