மதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு!

மதுரை மாவட்டம் கரிசல் குளத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் இளைஞர்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் கரிசல் குளத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 22 காளைகள் பங்கேற்றன.

ஜல்லிக்கட்டு நடப்பதாக வெளியான தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், இது தொடர்பாக அக்கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.