செய்திகள் உண்மை உடனுக்குடன்

’ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு’: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்

Mukul rohatgi jallikkattu

ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் மனு மீது மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தலைமை வழகறிஞரிடம் கருத்துகேட்டது. இந்த கேள்விக்குப் பதிலளித்த முகுல் ரோஹத்கி, ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு சட்டம் இயற்றலாம். இதற்காக தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றினால் ஆளுநர் மூலம் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் இருக்காது. அதேநேரம் தமிழக அரசு இயற்றும் சட்டம் காளைகளைப் பாதிக்காத வகையில் இருந்தால், அதனை உச்சநீதிமன்றம் ஆட்சேபிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.