செய்திகள் உண்மை உடனுக்குடன்

உடனடியாக கலைந்து செல்லுங்கள்...மெரினாவில்‌ காவல்துறை அறிவுறுத்தல்

Police fb

சென்னை மெரினா கடற்கரையில் குவிந்துள்ள போராட்டக்காரர்களை அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு ‌ காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை காவல்துறை இதுகுறித்து அறிக்கை வெளியி்ட்டுள்ளது. போராட்டத்திற்கான நோக்கங்கள் நிறைவேறி விட்டதாகவும் எனவே போராட்டக்காரர்கள் உடனடியாக கலைந்து செல்லும்படியும் அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் முயற்சியால் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்றதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி முதல் போராட்டங்கள் ‌அமைதியாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்து வருவதாகவும் அதற்காக நன்றி என்றும் காவல்துறை கூறியுள்ளது.