செய்திகள் உண்மை உடனுக்குடன்

நிரந்தர சட்டத்துக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரவேற்பு

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் தாக்கல் செய்யப்பட்டதற்கு, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ‌வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு சட்டத்தை நிறைவேற்றுவதற்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்துக்கு காங்கேயம் காளை ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவனோபதி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், இசையமைப்பாளர் ஆதி, வீர விளையாட்டு மீட்பு கழக மாநில தலைவர் ராஜேஷ், மற்றும் அம்பலத்தரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். சட்ட மசோதா நிறைவேறிய பின்னர் இதுதொடர்பாக தலைமைச் செயலகத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கான சட்டம் ஒருமனதாக நிறவேற்றப்பட்டது. இந்த வெற்றி போராட்டக்களத்தில் நின்று போராடிய அனைத்து மாணவர்களுக்குமான வெற்றி, இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொண்டு மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.