செய்திகள் உண்மை உடனுக்குடன்

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு... சீறிப்பாய தயாராகும் காளைகள்..!

Jallikattu

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்க உள்ளன. இதில் பங்கேற்க 913 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 1050 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு முதல் கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

போட்டிக்கு முன்னதாக, காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இரண்டாம் கட்ட பரிசோதனை நடத்தப்பட உள்ளது. போட்டிகளை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அவனியாபுரத்தில் 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் மதுரை மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தெரிவித்துள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி முழுவதையும் புதிய தலைமுறை நேரடியாக ஒளிபரப்ப உள்ளது‌.