செய்திகள் உண்மை உடனுக்குடன்

அனைவரும் வருவார்கள்: மாஃபா பாண்டியராஜன்

அதிமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அணி திரள்வார்கள் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் புதிய திருப்பமாக சசிகலா அணியில் இருந்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று குறிப்பிட்டார். மேலும், ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக பன்னீர்செல்வம் தலைமையில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவருக்கு, தாம் ஆதரவு தெரிவித்ததாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் முதல் அமைச்சர் மாஃபா பாண்டியரஜன் ஆவார்.