செய்திகள் உண்மை உடனுக்குடன்

தமிழக மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்: தமிழிசை

Tamilisai fb

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் தமிழக மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பினால் தமிழக மக்கள் காப்பாற்றபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஊழல் வாதிகள் தப்பிக்கமுடியாது என்பதற்கு இந்தத் தீர்ப்பு உதாரணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், எம்.எல்.ஏக்கள் கட்டாயத்தால் முடிவு எடுக்காமல், மக்களுக்காக சுதந்திரமாக சிந்தித்து தங்களது தேர்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை கேட்டுக்கொண்டார்.

கூவத்தூர் தனியார் விடுதி உள்ளே என்ன நடந்தது என்பது குறித்து எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழிசை வலியுறுத்தினார். ஆளுநர் காலதாமதம் செய்வதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பு, கால அவகாசம் எடுத்துக்கொண்டது சரி என்பதை உண்ர்த்தியுள்ளதாகவும் தமிழிசை கூறியுள்ளார்.