செய்திகள் உண்மை உடனுக்குடன்

முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு தீபா ஆதரவு

தமிழக அரசியல் களம் நிமிடத்திற்கு நிமிடம் மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், மற்றொரு திருப்பமாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் தமது‌ ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சென்றார். சற்று நேரத்தில் தீபா அங்கு வந்தார். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் இருவரும் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தீபா தமது அரசியல் பிரவேசம் தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். முதலமைச்சருடன் இணைந்து இருகரங்களாக செயல்படப்போவதாகவும் அவர் கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போது, சசிகலா செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லப்போவதாக தெரிவித்தார்.