செய்திகள் உண்மை உடனுக்குடன்

டிடிவி தினகரன் பொறுப்புக்கு தகுதியானவர் : நாஞ்சில் சம்பத்

Ttt

டிடிவி தினகரன் அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்புக்கு தகுதியானவர் என அதிமுக செய்தி தொடர்பாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

வேலூரில் இது குறித்து பேசிய அவர், அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றார். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு டிடிவி தினகரன் தகுதியானவர் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார். அதிமுக எம்எல்ஏக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க உரிமை கோரியும் ஆளுநர் தாமதம் செய்வதற்கு பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார்