செய்திகள் உண்மை உடனுக்குடன்

பன்னீர் செல்வத்திற்கு நட்ராஜ் எம்எல்ஏ ஆதரவு

மக்கள் விருப்பப்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பேன் என மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

மயிலாப்பூரில் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்போவதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் விருப்பத்தை மதிப்பதாகவும்,அவர்களின் விருப்பப்படி வாக்களிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவளித்து வாக்களிக்கப் போவதாக தகவல்கள் வருகிறதே அது உண்மையா என்று நட்ராஜிடம் நிருபர்கள் கேட்ட போது, அது உண்மைதான் என அவர் பதிலளித்தார்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ நட்ராஜ் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது அணி எம்எம்ஏக்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.