செய்திகள் உண்மை உடனுக்குடன்

மீண்டும் போராட்டம் என பரவும் தகவல்: மெரினாவில் காவல்துறையினர் குவிப்பு

சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்‌ பரவியதை அடுத்து காவல்துறையினர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கடற்கரை சாலையில் இருபுறமும் காவல் வாகனங்களுடன், 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், அதிரடிப் படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிகளை கூடுதல் காவல் ஆணையர் சேஷசாயி பார்வையிட்டார்.