செய்திகள் உண்மை உடனுக்குடன்

தமிழக அரசியல் 29 ஆண்டுகளுக்கு முன்...

தமிழக சட்டப்பேரவையில் சுமார் 29 ஆண்டுகளு‌க்கு பி‌றகு தற்போது மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

கடைசியாக கடந்த 1989-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிளவுபட்டது. அதிக உறு‌ப்பினர்களின் ஆதரவுடன் ஜானகி முதலமைச்சர் ஆனார். இதைத் தொடர்ந்து 1988ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி சட்டப்பேரவையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.

அதிமுகவின் 1‌30 உறுப்பினர்களில் 97 பேர் ஜானகி அணிக்கும் 33 பேர் ஜெயலலிதாவுக்கும் ஆதரவாக இருந்தனர். பரபரப்பான சூழலில் வாக்கெடுப்பு தொடங்கியது. ஜெயலலிதா அணியில் 33 பேர் ஜானகி‌க்கு எதிராக வாக்களித்த நிலையில் அவர்கள் வாக்குகளை செல்லாதது ஆக்கி பதவி நீக்குவதாக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உத்தரவிட்டார். வாக்கெடுப்பில் ஜானகி அணி வெற்றிபெற்றதாக அவர் அறிவித்தார்.

இதையடுத்து சட்டப்பேரவைக்குள் வன்முறை மூண்டது. காகிதங்களும் மைக்குகளும் மாறிமாறி பறந்தன. இதில் சில உறுப்பினர்கள் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக கூறி ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தது.