செய்திகள் உண்மை உடனுக்குடன்

அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம்

தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை, சட்டப்பேரவை‌ செயலர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ளார்.

நாளை எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில், அவை முன்னவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக இருந்தார்.