செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஜெயலலிதாவை நினைத்து பார்க்க வேண்டும்... ஓ.பன்னீர்செல்வம்

சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், எம்எல்ஏக்கள் முடிவு எடுப்பதற்கு முன் ஜெயலலிதாவை நினைத்து பார்க்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ள போதிலும், முதலமைச்சர் நாளையே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

இந்நிலையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏ-க்கள் முடிவு எடுப்பதற்கு முன் ஜெயலலிதாவை நினைத்து பார்க்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். எம்எல்ஏக்கள் எந்த ஆசை வார்த்தைக்கும் மயங்க மாட்டார்கள் என நம்புவதாக கூறியுள்ள அவர், எம்எல்ஏ-க்கள் அரசின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது என்பதே ஜெயலலிதாவின் விருப்பம் என தெரிவித்த அவர், மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்குதான் எனவும் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் கொள்கையை கட்டிக் காத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.