செய்திகள் உண்மை உடனுக்குடன்

அமைதி வழியில் போராடுவோ‌ரை கைது செய்ய வேண்டாம்.. ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் அமைதி வழியில் போராடுவோ‌ரை கைது செய்ய வேண்டாம் என காவல்துறைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் தாங்கள் விரும்பாத ஆட்சி அமைவதற்கு துணை போகும் தங்களது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைதியான வழியில் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். வாக்களித்த மக்களுக்கு தங்களது வேதனைக்குரலை வெளிப்படுத்த இதைத் தவிர வேறுவழி தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைப்பதாக தமக்கு தகவல்கள் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே கைது செய்த அப்பாவிப் பொதுமக்களை உடனடியாக விடுவிப்பதுடன், ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் பாரபட்சமின்றி செயல்பட்டதைப் போலவே தற்போதும் காவல்துறையினர் செயல்பட வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.