செய்திகள் உண்மை உடனுக்குடன்

சசிகலா சபதம் ஆத்திரத்தின் வெளிப்பாடு: ஸ்டாலின்

Sasikala - stalin 700 x 350

சசிகலா மெரினாவில் நடந்துக் கொண்ட விதம் ஆத்திரத்தின் வெளிப்பாடு என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது சிறைக்கு செல்வதற்கு முன்பு சசிகலா மெரினாவில் நடந்துக் கொண்ட விதம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலா முதலமைச்சர் ஆகும் கனவில் இருந்ததாகவும் அது நிறைவேறாமல் போனதால் அதன் வெளிப்பாடாக அவ்வாறு நடந்துக்கொண்டார் என ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் வைகோ குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், அவர் அரசியல் ஞானி என்று தெரிவித்தார்.