செய்திகள் உண்மை உடனுக்குடன்

தமிழகத்தில் நடைபெறும் பினாமி ஆட்சியை அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெறும் பினாமி ஆட்சியை அகற்ற வேண்டும் என்று திமுக செயல்தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டபேரவையில் நடந்த பிரச்னைகள் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து முறையிடுவதற்காக ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி புறப்படும் முன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நடைபெறும் பினாமி ஆட்சியை அகற்றுவது குறித்தும், நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந்த ஜனநாயக விரோத நடவடிக்கை குறித்தும் குடியரசுத் தலைவரிடம் முறையிட உள்ளதாக தெரிவித்தார்.