பட்ஜெட் தாக்கல் செய்யப் போகும் அமைச்சர் ஜெயக்குமார்..!

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கூடுதலாக நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே நடப்பு நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை ஜெயக்குமாரே சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். இந்நிலையில் தற்போது முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் வசம் இருந்த நிதித்துறை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை தவிர முதலமைச்சர் பழனிசாமி வசம் இருந்த திட்டம், ஊழியர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் ஆகிய துறைகளும் ஜெயக்குமார் வசம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எனவே இந்தாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கையை ஜெயக்குமாரே சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.