செய்திகள் உண்மை உடனுக்குடன்

பேரிடர் நேரத்தில் வராத பிரதமர் சிவராத்திரிக்கு வருகிறார்: திருமா

புயல், வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் ஏற்பட்டபோது தமிழகத்திற்கு வராத பிரதமர் மோடி, மஹாசிவராத்திரிக்கு வருகை தருவது மதம் சார்ந்த சிந்தனைகளின் மேலாதிக்கத்தை காட்டுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கார்ப்பரேட் நிறுவனங்களும், மதகுருமார்களும் பிரதமரை இயக்கி வருவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தமிழக அரசு இன்னும் வீரியமாக செயல்படாமல் மந்தநிலையில் இருப்பதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் பன்றி காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.