செய்திகள் உண்மை உடனுக்குடன்

சுற்றுலா பயணிகள் வருகை: 3வது முறையாக தமிழ‌கம் முதலிட‌ம்

2016ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாண்டுகளாக தமிழகம் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய சுற்றுலா துறை அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி 2015ஆம் ஆண்டு 6.8 சதவிகிதமாக இருந்த உள்நாட்டு சுற்றுலா, 2016-ல் இரண்டு மடங்காக அதாவது 16.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2016-ல் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, ஆயிரத்து 653 மில்லியன். இதில் தமிழகத்திற்கு மட்டும் 344.3 மில்லியன் பயணிகள் வருகை தந்துள்ளனர். உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த மாநிலங்களில் உத்தரபிரதேசம் இரண்டாம் இடத்தையும், மத்திய பிரதேசம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.