செய்திகள் உண்மை உடனுக்குடன்

தமிழகத்தில் நிம்மதி இல்லாத ஆட்சி: ஸ்டாலின்

Stalin fb  large

தமிழகத்தில் தற்போது நிம்மதி இல்லாத ஆட்சி நடைபெறுவதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ‘அதிமுக, சசிகலாவுக்கா அல்லது ஓ.பன்னீர்செல்வத்துக்கா என்பதை தேர்தல் ஆணையம், ஓரிரு நாட்களில் அறிவித்துவிடும்’ எனக் கூறினார். தமிழகத்தில் தற்போது நிம்மதி இல்லாத ஆட்சி நடைபெறுவதாகவும் எப்போது என்ன நடக்கும் என்ற நிலையில்தான் அதிமுக ஆட்சி உள்ளது எனவும் ஸ்டாலின் கூறினார். மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர் விஜயபாஸ்கர் ஊடகங்களை சந்தித்தாரா எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.