செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஸ்டாலின் முதல்வராக முடியாது: டிடிவி தினகரன்

மு.க.ஸ்டாலினால் ஒரு போதும் முதலமைச்சராக முடியாது என,‌ அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

‌மறைந்த முன்னாள்‌ முதலமைச்சர் ஜெயலலிதாவின்‌ 69-வது பிறந்த நாள் விழா சென்னை ‌‌திருவொற்றியூரி‌ல் நடைபெற்றது. இதில் பேசிய அ.தி.மு‌.க. பொதுச்செயலாளர் டி.டி.வி‌.‌ தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்‌த‌லுக்குப்‌ பிறகு ஓ‌.பன்னீர்செல்வம் அணி காணாமல் போய்விடும் ‌என்று தெரிவித்தார். ஓ‌‌.‌பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது ஆத‌ரவாளர்கள் ஒன்றாக வந்தாலும்‌ அ.தி.மு.க.வை‌ ஒன்றும் செய்ய முடியாது‌ என்றும்‌‌ தினகரன் கூறினார். தி.மு‌.க.வி‌‌ன் சட்டமன்ற உறுப்பினர்கள் ‌எங்கள் பக்கம் வர‌வுள்ளதாகவும், ஸ்டாலின் முதல்வராக முடியாது‌ என்றும் தினகரன் தெரிவித்தார்.