செய்திகள் உண்மை உடனுக்குடன்

மக்கள் நலக்கூட்டணி யாருக்குத்தான் ஆதரவு?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என திருமாவளவன் கூறியுள்ள நிலையில் மக்கள் நலக் கூட்டணி ஆர்.கே. நகரில் போட்டியிடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டியக்கம் இயங்கி வருவதாக அவர் தமது முகநூல் பதிவில் கூறியுள்ளார். ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் மாற்றை முன்நிறுத்தி மக்கள் நலக் கூட்டியக்கம் போட்டியிடும் என கூறியுள்ளார்.