இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையரை சந்திக்கும் பன்னீர்செல்வம்

தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசுகிறார். நண்பகல் 12 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியல் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் 61 பக்கங்கள் கொண்ட பதில் அளிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் நேரில் வந்து விளக்கமளிக்குமாறு பன்னீர் செல்வத்தை தேர்தல் ஆணையம் அழைத்துள்ளது. இதனையடுத்து பன்னீர்செல்வம் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை இன்று சந்தித்து பேசுகிறார்.