செய்திகள் உண்மை உடனுக்குடன்

இரட்டை இலை எங்களுக்குத் தான்: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி மனு

Ops 11

அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர்.

அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை பெற ஓபிஎஸ் அணியினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இதுதொடர்பாக இன்று தேர்தல் ஆணையத்திடம் அவர்கள் மனு அளித்துள்ளனர். அதில், அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர்களால் சசிகலா தேர்வு செய்யப்படவில்லை எனவும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். டிடிவி தினகரன் மீது ஃபெரா வழக்குகள் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தங்களது கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் நல்ல பதில் அளிக்கும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.