சசிகலா நியமனம் செல்லுமா? 20ம் தேதிக்குள் தெரியும்

Sasikala

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பாக வரும் திங்கள்கிழமைக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இந்த புகார் மனுவுக்கு சசிகலா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விளக்கத்துக்கு ஓபிஎஸ் அணி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சசிகலா நியமனம் தொடர்பாக மார்ச் 20க்குள் முடிவு அறிவிக்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.