செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஓரிரு நாளில் முடிவு: திருமாவளவன் மீண்டும் தகவல்

Thiru

ஆர்.கே.நகர் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் நிலைபாடு குறித்து ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், மக்கள் நலக்கூட்டியக்கத்தில் 3 கட்சிகள் உள்ளன. ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியா? இல்லையா? என ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறோம், இடைத்தேர்தலில் போட்டியில்லையென்றால் மக்கள் நலக்கூட்டியக்கத்தின் ஆதரவு யாருக்கு? என்பது பற்றி கூட்டணியில் உள்ள தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இடைத்தேர்தலில் போட்டியிடாத பட்சத்தில் திமுக, அதிமுகவின் அழைப்பு பற்றி விவாதிப்போம் என கூறிய அவர், பொதுத்தேர்தல் களம் வேறு, இடைத்தேர்தல் களம் வேறு எனவும் திருமாவளவன் கூறினார்.