குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி

700x350-water

குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, ரூ.615 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.265 கோடியும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ. 165 கோடி நிதி ஒதுக்கீடும், நீதித் துறை மேம்பாட்டுக்கு ரூ.983 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகக் கூறினார்.