ரூ.150 கோடியில் இளைஞர்களுக்கு பயிற்சி

Employmet621

ரூ.150 கோடி செலவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்க உள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில், கோவை, திருச்சி, மதுரையில் ரூபாய் 150 கோடி செலவில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ. 165 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், 10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறிய அவர், காவல்துறையினர் வீட்டு வசதிக்கு ரூ. 450 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.