செய்திகள் உண்மை உடனுக்குடன்

மீனவர்களுக்காக 5,000 வீடுகள்

700x350-fisher

மீனவர்களுக்கு ரூ.85 கோடி செலவில் 5000 வீடுகள் கட்டித்தரப்படும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கலான பட்ஜெட்டில், நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் ஆண்டுக்கு 3000 லிட்டரில் இருந்து 3400 லிட்டராக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணூர், காசிமேடு உட்பட 7 மீன்பிடி துறைமுகங்கள் ரூ.1105 கோடி செலவில் மேம்படுத்தப்படும் எனவும், இயந்திர மீன்பிடி படகுகளுக்கான டீசல் 15,000 லிருந்து 18,000 லிட்டராக உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் எனவும், மீனவர்களுக்கான நிவாரண உதவித்தொகை ரூபாய் 4,500 ஆக உயர்த்தப்படும் எனவும் ரூ.85 கோடி செலவில் 5000 வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.